போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் சாதகமான பெறுபேறுகளை இந்த வருட நடுப்பகுதியளவில் மக்களும் அரசாங்கமும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விரிவான செயற்திட்டங்களே அதற்கு காரணம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (21) முற்பகல் ஹம்பாந்தோட்டை மாவட்ட நிர்வாக கட்டிடத் தொகுதி வளாகத்தில் இடம்பெற்ற கிராமசக்தி இயக்கத்தின் தென் மாகாண செயற்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ;, வறுமையால் துயரப்படும் மக்களை அதிலிருந்து விடுவித்து, அவர்களது உற்பத்திகளை பொருளாதார ரீதியில் அதிகரிப்பதே கிராமசகதி மக்கள் இயக்கத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் அச்சுறுத்தல் உள்ளிட்ட மக்களை வறுமை நிலைக்கு இட்டுச் செல்லும் அனைத்து சூழ்நிலைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி பலமான பொருளாதாரத்துடன் தன்னிச்சையாக, முன்னேற்றமடைந்த ஒரு தேசத்தை உருவாக்குவதற்காக கிராமசக்தி மக்கள் இயக்கத்தினூடாக பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ; தெரிவித்தார்.
கிராமங்களில் வாழும் ஏழை மக்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் நுண்கடன் தொடர்பிலும் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் தலையீடு செய்யும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.