Home உலகம் ஸ்பெயினில் பிரபல உணவகத்தில் உணவு உட்கொண்ட பெண் உயிரிழப்பு – 28 பேருக்கு பாதிப்பு

ஸ்பெயினில் பிரபல உணவகத்தில் உணவு உட்கொண்ட பெண் உயிரிழப்பு – 28 பேருக்கு பாதிப்பு

by admin


ஸ்பெயினில் வலன்சியாவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இரவு உணவு உட்கொண்ட ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் 12 வயது மகனுடன் இந்த உணவகத்துக்கு சென்று இரவு உணவு உட்கொண்ட பின்னர் இவர்கள் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதனையடுத்து குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் ஏனையவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த உணவகம் மூடப்பட்டுள்ளதுடன் உணவகத்தில் வழங்கப்பட்ட உணவு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தமாதம் இந்த உணவகத்தில் உணவு உண்ட 75 பேரிடம் விசாரணை செய்த அதிகாரிகள் அவர்களில் பலருக்கு உணவு கெட்டு போவதால் உண்டாகும் பாதிப்பு ஏற்பட்டதாக கண்டறிந்துள்ளனர்.

மிச்சலைன் கைட் என்ற உணவகங்களின் தரத்தினை வரையறை செய்யும் குழுமம் இந்த உணவகத்துக்கு சிறந்த உணவகம் என்ற தர சான்றிதழை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More