கொடைக்கானலில் அருகே வெள்ளி அருவி வனப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாகக் காட்டுத் தீ தொடர்ந்து விடாமல் எரிந்து வருகின்றதாகவும் தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.
குறிஞ்சி நகர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தோட்டப் பகுதிகளில், பராமரிப்பு காரணமாக வைக்கப்பட்ட தீயானது, தரிசு நிலப்பகுதிகளில் பரவி வனப்பகுதிகளிலும் பரவியுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது
தொடர்ந்து நான்கு நாட்களாக எரியும் தீயினால் பல ஏக்கர் நிலங்களில் உள்ள தோடை மற்றும் கோப்பித் தோட்டங்கள் எரிந்து தீயில் கருகியுள்ளதுடன் கொடைக்கானல் – பழநி சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வனத் துறையினர் தொடர்ந்து தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன் தீ மேலும் பரவாமல் தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ள போதிலும் முழுமையாக இன்னும் தீயை அணைக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்கொடைக்கானல் மலைப்பகுதி புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் மலை ஏற்றக் குழுவினர் பலர் சிக்கி உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.