Home உலகம்ரஸ்யாவில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை…

ரஸ்யாவில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை…

by admin

ரஸ்யாவில் ராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா பாராளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ரஸ்யாவில் ராணுவ வீரர்கள் முகப்புத்தகம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதனால் ராணுவம் குறித்த ரகசிய தகவல்கள் பொதுவெளியில் கசிவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்த நிலையில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தினர்.

அந்த வகையில் ராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா பாராளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.  அதனை தொடர்ந்து அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மொத்தம் உள்ள 450 உறுப்பினர்களில் 400-க்கும் மேற்பட்டோர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தமையினால் மசோதா நிறைவேறியுள்ளது.

இந்த மசோதா பாராளுமன்ற மேல்சபையிலும், கூட்டமைப்பு பேரவையிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஜனாதிபதி புட்டின்  கையெழுத்திட்டதன் பின்னர் சட்டமாக இயற்றப்பட்டு அமுலுக்கு வரும்.

இந்த சட்டம் அமுலுக்கு வந்தால் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி மடிக்கணிணி உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு தடைவிதிக்கப்படுவதுடன்  அவர்கள் ராணுவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசவும், எழுதவும் தடை வரும் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More