காணாமற்போனவர்கள் தொடர்பாக எந்தவொரு மரணச் சான்றிதழும் வழங்கப்படவில்லையென, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் பாராளுமன்றில் இடம்பெற்ற வாய்மூல கேள்விபதில் நேரத்தின் போது, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம், பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது நசீர் கேள்வி எழுப்பியிருந்தார்.
காணாமற்போனோர் தொடர்பான பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள மரணச் சான்றிழ்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு மாவட்டத்தின் பிரகாரம் தனித்தனியாக எத்தனை என்பதை, அமைச்சர் கூறுவாரா அவ்வாறு இல்லiயெனில் அது ஏன் என முஹம்மது நசீர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, எந்தவொரு மரண சான்றிதழும் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும் அடுத்தக் கேள்வி ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.