196
கொழும்பிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்து கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (23.02.2019 ) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்;
இவ் விபத்தினால் காரில் பயணித்த மூவரில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் விபத்து தொடர்பில் திம்புள்ள பத்தனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
Spread the love