170
தென் அமெரிக்காவின் பெரு – ஈக்வேடார் நாடுகளின் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 30 விநாடிகள் அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பதுடன் பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
கடந்த 2007-ம் ஆண்டு பெருவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love