சீனாவில் தன்னாட்சி உரிமம் பெற்ற மங்கோலியா பகுதியில் உள்ள வெள்ளிச் சுரங்கம் ஒன்றில் இன்று ஏற்பட்ட விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் 30 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்துக்கு பிணபுரிவதற்காக சுமார் 50 தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று சுரங்கத்தின் அடிப்பகுதியில் செங்குத்தாக கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு சுவரில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
காயமடைந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.