0
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 278 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று டேராடூனில் நடந்து வருகிறது. நூயணச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது
Spread the love