பெங்களூருவில், சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் நேற்றையதினம் ஏற்பட்ட தீ விபத்தில் 300 கார்கள் எரிந்துள்ளதுடன் கார்களில் இருந்த ஆவணங்களும் சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகின்ற நிலையில 4-வது நாளான நேற்று நடந்த விமான கண்காட்சியில் போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் சாகசத்தில் ஈடுபட்டன.
விமான கண்காட்சியை காண சென்ற பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு விமானப்படை தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று மதியம் 5வது தளத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாகவே இவ்வாறு 300 கார்கள் எரிந்துள்ளன.
தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் 2 மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்கள் பலத்த சேதம் அடைந்துள்ளதன் காரணமாக பல கார்களின் பதிவெண் உள்பட எந்த விவரங்களும் சரியாக தெரியவில்லை என்பதுடன் கார்களின் உள்ளே இருந்த கார் தொடர்பான ஆவணங்கள் உள்பட பல்வேறு பொருட்களும், எரிந்து சாம்பலானது.
இந்த தீவிபத்துக்கான சரியான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. யாரேனும் சிகரெட் புகைத்து காய்ந்தபுற்களில் எறிந்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் , அல்லது ஏதேனும் காரில் டீசல் ராங்க் வெடித்து nஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது