அமைச்சர்கள் மற்றும் பாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்த குழுவின் அறிக்கை நேற்றைய தினம் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் குழு கூட்டத்தின் போது அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறித்த குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் வழங்கியிருந்தார். இந்தநிலையிலேயே அறிக்கையே இவ்வாறு பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதன் பிரதி ஒன்றினை குற்றத்தடுப்பு பிரிவினருக்கும் வழங்கவுள்ளதாக அவைத்தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.