முல்லைத்தீவு மாங்குளம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து தரித்து நின்ற கல் ஏற்றும் ரிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் பேருந்து சாரதியின் கவனயீனம் மற்றும் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் எனத் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
Add Comment