சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தூத்துக்குடியில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது 14 பேர் தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தனர்.
கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி இந்த சம்பவம் குறித்த ஆவணப்படமொன்றை சென்னையில் வெளியிட்ட சமூக ஆர்வலரான முகிலனை அன்றுமுதல் காணவில்லை. இதுகுறித்து, முதலில் புகையிரத காவல்துறையினரும், பின்னர் எழும்பூர் காவல் நிலையத்தின் சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால், இந்த வழக்கை நேற்று திங்கட்கிழமை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது