வைர வியாபாரி நீரவ் மோடியி சொத்துகளை அமுலாக்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். பஞ்சாப் நசனல் வங்கியில் போலியான ஆவணங்களைக் கொண்டு 13,700 கோடி ரூபாக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சொத்துகள் அமலாக்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி, நேற்றையதினம் மும்பை மற்றும் சூரத் நகரங்களில் உள்ள நீரவ் மோடியின் 147.72 கோடி ரூபா மதிப்பிலான சொத்துகள் அமுலாக்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. எட்டு கார்கள், நகைகள், சில கட்டடங்கள், விலையுயர்ந்த ஓவியங்கள் உள்ளிட்ட சொத்துகள் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி தடுப்புச் சட்டம் 2002இன் கீழ் சென்ற ஆண்டு முதலே நீரவ் மோடி மீது அமுலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே 1,725 கோடி ரூபா மதிப்பிலான நீரவ் மோடியின் சொத்துகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அமலாக்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது