நுவரெலியா பகுதிகளில் உள்ள தோட்ட பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (27.01.2019 ) மாலை நுவரெலியா மற்றும் லிந்துலை ஆகிய பகுதிகளுக்கு சென்ற ஆளுநர் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்த பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
லிந்துலை பகுதிக்கு சென்ற அவர், லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு சென்று அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, லிந்துலை வைத்தியசாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் வைத்தியசாலையின் பிரதான வைத்தியரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஆளுநரின் பிரத்யேக செயலாளர், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)