இந்தியத் தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கமைய இந்திய விமானப்படை விங் கொமாண்டர் அபிநந்தன் வர்தமான் பற்றிய தகவல்கள் அடங்கிய 11 வீடியோக்களை யூரியூப் தளம் நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவரைப் பற்றிய முக்கியமான தகவல்கள் அடங்கிய பல வீடியோக்கள் யூரியூப் வெளியாகத் தொடங்கியிருந்தன. பல சமூக வலைதளங்களுக்கும் அது பரவுவதற்கு முன்னதாகவே தகவல் தொடர்புத் துறை மூலம் கூகுள் நிறுவனத்திடம் இந்திய மத்திய அரசு பேசியதன் எதிரொலியாக, குறிப்பிட்ட 11 வீடியோக்களும் நிரந்தரமாக யூரியூப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்துக்குட்பட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் தகவல்களை தமது தளத்திலிருந்து நீக்குவதில் பாரபட்சம் காட்ட மாட்டோம் என யூரியூப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.