அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் அல்கைதா இயக்கத்தின் தலைவரான பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்துள்ளதாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.
இதனையடுத்து பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக பார்க்கப்படும் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அமெரிக்கா அவரை தேடி வருவதுடன் ஹம்ஸா பின்லேடனின் வசிப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அவரது குடியுரிமை கடந்த நவம்பர் மாதமே ரத்து செய்யப்பட்டு, அதற்கான கோப்பில் கையெழுத்திடப்பட்டுள்ளது என சவூதி தெரிவித்துள்ளது. எனினும் , நேற்றையதினம்தான்