பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜ,ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் இ,தணிகாசலம் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினர் இன்று வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாரி மலைக்கு சென்றுள்ளனர்.
காலை ஏழுமணியளவில் வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற அவர்கள், ஆலயத்தின் பூசகர் மற்றும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி இருந்ததுடன் பூஜை நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளனர். வெடுக்குநாரி மலை ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த முயற்சி பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருந்தது.
அத்துடன் புதிதாக மக்கள் மீள்குடியேறிய பகுதியான காஞ்சூர மோட்டை கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைநிறைகளை மக்கள் பிரதிநிதிகள் கேட்டறிந்துகொண்டனர். காஞ்சூர மோட்டை கிராம மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் இப் பகுதியை இலக்கு வைத்து பெரும்பான்மையின மக்களின் குடியேற்ற முயற்சிகள் சிலவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.