இங்கிலாந்துக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் 113 ஓட்டங்களால் வெற்றி பெற்ற மேற்கிந்தியதீவுகள் அணி தொடரை 2-2 என சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்குமிடையில்; ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்;ற நிலையில் முடிவுற்ற நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 5-வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நேற்று கிராஸ் ஐலேட்டில் நடைபெற்றது.
நாயணச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியதீவுகள் அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 28.4 ஓவர்களில் 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது
இதனைத் தொடர்ந்து 114 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியதீவுகள் அணி கிறிஸ் கெயிலின் அபார ஆட்டம் காரணமாக 12.1 ஓவரிலேயே 115 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-2 என சமன் செய்துள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது