பாகிஸ்தான் சிறைகளில் 48 ஆண்டுகளாக வாடும் 54 இந்திய ராணுவ வீரர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இடம்பெற்ற போரில் 54 ராணுவ வீரர்கள் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில 30 பேர் ராணுவத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு அந்த நாட்டு சிறைகளில் 48 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வருகின்றனர் எனவும் அவர்களை அங்கிருந்து மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 48 ஆண்டுகளாக திரும்ப திரும்ப மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பிடியில் ராணுவ வீரர்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் மற்றும் சர்வதேச பத்திரிகை செய்திகள் குறித்த தகவல்களும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை அங்கிருந்து மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.