பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு முக்கிய காரணியாக செயற்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல், இந்திய பாராளுமன்ற தாக்குதல், பதான்கோட் விமானப்படைத் தாக்குதல் உட்பட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு முக்கிய காரணியாக செயற்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி அண்மையில் வழங்கிய செவ்வியொன்றில் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் உள்ளார் எனவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மசூத் அசார் கடந்த 2-ம் திகதி உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்தவில்லை.
கடந்த 26-ம் திகதி பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கிய போது பலத்த காயமடைந்த மசூத் அசார் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இதனை ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மறுத்துள்ளது.