தென்னாபிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்போவதாக அறிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியின் போது சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான 39 வயதான இம்ரான் தாஹிர் இதுவரையில் 20 டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்காவுக்காக விளையாடி 57 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
95 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இம்ரான் தாஹிர் 156 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.சர்வதேச ஒருநாள் அரங்கில் தென்னாபிரிக்கா சார்பாக வேகமாக 150 விக்கெட்களை வீழ்த்திய மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளையோருக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு தான் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறுவதற்குத் தீர்மானித்ததாக இம்ரான் தாஹிர் கூறியுள்ளார்.