158
அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள், ஊழல்கள் குறித்து முறைபாடுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவு பெறுவதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை 333 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதெனத் தெரிவித்துள்ள ஆணைக்குழு அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கொழும்பு-07 என்ற முகவரிக்கோ, 0112-665382 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தோ முறைபாடுகளைத் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Spread the love