குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தில் கம்பெரலிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி புனரமைப்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது என குற்றம் சுமத்தியுள்ள பொது மக்கள் குறித்த வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் மாவட்ட மட்ட உயரதிகாரிகளை கவனம் செலுத்துமாறு கோரியுள்ளனர்.
மேற்படி இத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்களில் வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் கீழ் ஒவ்வொரு மாவட்டச் செயலகங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் மாவட்டத்தில் சில வீதிகள் தெரிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்க்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளின் தொழிநுட்ப மேற்பார்வை அந்தந்த பிரதேச சபைகள். ஆனால் இங்கு முறையான தொழிநுட்ப மேற்பார்வையோ, அல்லது ஒப்பந்தத்தின் குறிப்பிடப்பட்ட நியமங்களுக்கு அமைவாகவோ பணிகள் மேற்கொள்ளப்படாது தரமற்ற அபிவிருத்திப் பணிகளை ஒப்பந்தகாரர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதனை மேற்பார்வை செய்கின்றவர்களும் அதனை கவனத்தில் எடுக்காது செயற்படுகின்றனர் எனத் தெரிவிக்கும் பொது மக்கள் குறித்த வீதி அபிவிருத்திப் பணிகளின் தரம் தொடர்பில் முறையான தொழிநுட்ப மேற்பார்வை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு மாவட்ட உயரதிகாரிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.