குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுன்னாகம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த மூதாட்டி மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சுன்னாகம் கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த கும்பலே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
முகங்களை மூடி கட்டியவாறு வீட்டினுள் புகுந்த மூன்று பேர் கொண்ட கும்பலே தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.