அறுவடைக்குப் பின்னர் எஞ்சிய பாகங்களை எரிப்பதால் உண்டாகும் புகை மாசுபாட்டால் இந்தியாவுக்கு ஆண்டு தோறும் 30 பில்லியன் டொலர் வரையில் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் இது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகை மாசுபாட்டால் ஐந்து வயது வரையில் உள்ள குழந்தைகள்; அதிகமாகப் பாதிக்கப்படுவதாகவும் பெரியவர்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் இ அதிகமாக ஏற்படுவதாகவும், அதனால் மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டள்ளது.
ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் இந்த அரிதாள் எரிப்பில் அதிகமாக ஈடுபடுவதால் டெல்லியில் புகை மாசு மேலும் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வரையறையில் உள்ள அளவை விட 20 மடங்கு அதிகமாக டெல்லியில் புகை மாசு அளவு இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.
இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் ஆய்வு நடத்தி இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.