இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு வரும் மூன்றாண்டுகளுக்கு 60 மில்லியன்கள் குரேன்களை வழங்குகிறது நோர்வே அரசு என இன்று (06-03-2019) முகமாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான நோர்வே தூதுவர் தெரிவித்துள்ளார்.
நோர்வே தூதுவராலயகத்தின் அதிகாரிகள் இன்று (06) கிளிநொச்சி முகமாலை பகுதிக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக நோர்வேயின் அரசசெயலாளரும் இந்த பயணத்தில் கலந்துகொண்டார். இதன் போது குறித்த பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரடியாக பார்வையிட்ட அவர்கள். அங்கு ஊடகவியலாளர்களுக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நோர்வேயின் பங்களிப்பு தொடர்பில்இராஜாங்க செயலாளர் மேரியன் ஹேகன் மேற்கொண்டு சந்திப்பின் பின்னர் மேற்படி தெகையினை வழங்க நோர்வே முன்வந்துள்ளது.