189
யாழ் மாவட்டம் வலி மேற்கு மூளாயில் நிர்மாணிக்கப்பட்ட பொன்னொளி நகர் வீட்டுத் திட்டம் நாளை பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் ரணில் விங்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் இந்த வீட்டுத் திட்டம் நாளை காலை 9.30 க்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்உதாவ திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தில் 65 வீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love