138
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் ஒருபோதும் மாற்றம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பாண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார். தலம்பெதினிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக ஒருபோதும் தனித்து கட்சியினை உருவாக்கும் எண்ணம் கிடையாது மாறாக தற்போது பலவீனமடைந்துள்ள சுதந்திர கட்சியை பலப்படுத்துவதே பிரதான நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
Spread the love