Home இலங்கைமுன்னாள் கடற்படைத் தளபதியை கைதுசெய்ய, நீதிமன்றம் தடை விதித்தது…

முன்னாள் கடற்படைத் தளபதியை கைதுசெய்ய, நீதிமன்றம் தடை விதித்தது…

by admin

 


முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைதுசெய்வதற்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்நிலையில், தன்னை கைதுசெய்வதற்கு தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலமளிக்குமாறு கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More