164
திருநங்கைகளை பிரித்து வைப்பது தவறு என்று தமிழின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சீதக்காதியில் வயதான தோற்றத்தில் நடித்த அவர் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் வெளியான திரைப்படங்களில் 96 படம், இவருக்கு பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இந்தத் திரைப்படம் பிற மொழிகளிலும் போட்டி போட்டு தயாரிக்கப்படுகின்றது. அத்துடன் சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, மாமனிதன், தெலுங்கு, தமிழில் தயாராகும் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
அத்துடன் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடிக்கின்றார். அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய் சேதுபதியின் திருநங்கை வேடத்துக்கு வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன. குறித்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் திரைப்படம் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்புக்களை கொண்டுள்ளனர்.
விஜய் சேதுபதி இந்த தோற்றத்துக்காக மிகவும் சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்த கதாபாத்திரம் பற்றிய பேசிய விஜய் சேதுபதி,
“படத்தில் ஆணாக இருக்கும் நாம் எளிதாக திருநங்கை கதாபாத்திரத்தை செய்து விடலாம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் அந்த மாதிரி நடிக்க ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இந்த சமூகம் இந்த திருநங்கைகளை ஏன் இப்படி பிரித்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. அவர்களும் மனிதர்கள்தான். சாதி ஏற்றத்தாழ்வு போல் இதையும் தனித்தனியா பிரித்து வைப்பது தவறு. இது பெரிய அவமானம் ஆகும்” என்றார்.
Spread the love