மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 29ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சத்ய கவேஷகயோ என்ற அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவில், பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டிருந்த போதிலும் அவர்கள் சார்பில் எவரும் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. அதன்படி மனுவை ஒத்திவைத்து உத்தரவிட்ட நீதிமன்றம் அன்றைய தினம் பிரதிவாதிகளை முன்னிலையாக அழைப்பு அனுப்புமாறும் உத்தரவிட்டது. எல்லை நிர்ணயம் எனக் கூறிக்கொண்டு தேர்தலை தற்போதைய அரசாங்க பிற்போடுவதாகவும் இதனால் 6 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதுடன், மக்களின் வாக்குரிமை மீறப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான மனு 29ம் திகதி விசாரணைக்கு வருகிறது….
165
Spread the love
previous post