117
கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சீன உணவகம் ஒன்றில், சமையல் எரிவாயு வெடித்ததில் சீன ஜோடியொன்றும் மேலும் இருவருமாக நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதன் காரணமாக அருகில் அமைந்துள்ள 11 வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love