அனைத்துவிதமான பிரச்சினைகளிற்கும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணல் மற்றும் பிராந்தியத்தில் சமாதானம், ஸ்திரத்தன்மையுடன், அனைத்துவிதமான பிரச்சினைகளிற்கும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண்பதே பாகிஸ்தானின் விருப்பம் என பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரியா இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதேவேளை, பிராந்தியத்தின் அண்மைய பாதுகாப்பு விடயங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு உயர் ஸ்தானிகரால் விளக்கமளிக்கபட்டது.
அத்துடன் பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்டிருந்த பதட்ட சூழ் நிலையினை தணிக்க பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது எனவும் எந்தவிதமான வெளி ஆக்கிரமிப்பிலிருந்தும் தனது தேசத்தினை பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது என சபாநாயகருடனான சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment