177
பெண்களை வாட்டி வதைக்கும் நுண்கடன் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக மகளிர் தினமான இன்று, வவுனியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெண்கள் வாங்கிய கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூக வழிப்புணர்விற்கான மக்கள் ஒன்றியம், வவுனியா நகர சிறுவியாபாரிகள் சங்கம், பசுமை தொழிலாளர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அனைத்துலக மகளிர் தினமான இன்று வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
‘கடன் சுமை தவிர்ப்போம்’, ‘நுண்நிதி கடன் சுமை குடும்பங்கள் சீரழிவு’,‘ஏழைகளின் வாழ்வில் விளையாடாதே’, ‘பள்ளிக்கு செல்வதா அம்மாவின் கடனை அடைப்பதா’, ‘மக்களையும் நாட்டையும் அடகு வைக்காதே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு நுண்கடன் நடவடிக்கைகளுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நுண்கடன் காரணமாக வடக்கு கிழக்கில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love