இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்ல சர்வதேசப் பத்திரிகையாளர்களுக்கு பாகிஸ்தான் அரசு. மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியான பாலகோட் அருகே ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்குச் சொந்தமான மதரசா மீது கடந்த 26ஆம் திகதி தாக்குதல் நடத்தியதாக இந்திய விமானப் படை தெரிவித்திருந்த போதும் அதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்க்பபட்ட குறித்தர பகுதிக்குச் சென்ற ரொய்ட்டர்ஸ் செய்திநிறுவனத்தின் செய்தியாளர்கள் அங்கு தாக்குதல் நடந்ததற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என செய்தி வெளியிட்டியிருந்தனர். இந்த நிலையில், தற்போது அங்கு செய்தியாளர் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கான காரணங்களை தெரிவிக்க மறுத்துள்ளனர்.
கடந்த ஒன்பது நாட்களில் மட்டும், ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் மூன்று முறை அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளதாகவும் ஒவ்வொரு முறையும், அங்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தால் மதரசா நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்தப் பகுதி மதராசாவாக இருந்தது என்றும், தற்போது அது நடைமுறையில் இல்லை எனவும் ரொய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த கிராம மக்கள் அங்கிருந்த பள்ளி கடந்தாண்டு ஜூன் மாதம் மூடப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் அது தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் முகாம் என இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் மதரசா அமைந்துள்ள மலைப் பகுதிக்குச் செல்வதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 100 மீட்டர் தொலைவில் இருந்து அந்த பகுதியை பார்த்த ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்கள், அங்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்ட மாதிரி தெரியவில்லை எனவும் விமானத் தாக்குதல் நடந்து 6 நாட்கள் கழித்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்துக்கும், 2018 ஏப்ரல் மாதம் எடுத்த புகைப்படத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
டயரபா
ளஅடைந