202
இராணுவத் தளபதியான லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தலைமையில் முன்னெடுக்கப்படும் வெடிகுண்டு அகற்றும் திட்டத்திற்கமைவாக பிரித்தானியாவின் மார்ஷல் மரபுரிமை அமைப்பினால் பெல்ஜியம் மாலினோஸ் எனப்படும் இனத்தைச் சேர்ந்த நம் எனும் பெயரையுடைய நான்கு வயதுடைய நாயொன்று பொறியியலாளர் படையணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
‘நம்’ பொஸ்னியாவில் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியன்று பிறந்துள்ளதுடன் இது வடக்கு ஈராக்கின் வெடிகுண்டு அகற்றும் படையணியில் சேவையாற்றியதுடன் இதன் பயிற்றுவிப்பாளரான ஏடிஸ் பெல்டோவினால் இலங்கை இராணுவத்தின் 08 மோப்பநாய்களைக் கொண்ட வெடிகுண்டு அற்றும் படையணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
Spread the love