ஆப்கானிஸ்தானின் லாகர், வார்டாக், பாக்டிகாக் ஆகிய மாகாணங்களில் தலீபான் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழியாகவும், தரை வழியாகவும் ஆப்கான் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் 60 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் விமானங்கள் இடைவிடாது தொடர்ந்து குண்டுகளை வீசியமையினால் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் நிர்மூலமாக்கப்பட்டதுடன் தலீபான்களுக்கான வானொலிக் கோபுரம் மற்றும் அவர்களின் ஆயுதகிடங்குகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் காரணமாக 24 மணி நேரத்தில் 60 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் 24 மணித்தியாலங்கள் 60 தலிபான்கள் பலி என்கிறது அரசாங்கம்..
137
Spread the love
previous post