எத்தியோப்பியாவில் நிகழ்ந்த விமான விபத்தினைத் தொடர்ந்து போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்களையும் தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
எத்தியோப்பிய அரசுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ்-8 விமானம், நேற்றையதினம் கென்யா நோக்கி புறப்பட்டு சென்றபோது விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்திருந்தனர்.
விபத்து தொடர்பாக அதிகாரிகள் உயர்மட்ட விசாரணையைத் ஆரம்பித்துள்ள நிலையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் அனைத்தையும் உடனடியாக தரையிறக்கி, வர்த்தகரீதியிலான சேவையை நிறுத்தி வைக்கும்படி சீன அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்கள் அனைத்தையும் தீவிரமாக பரிசோதனை செய்து, அவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே விமான சேவை தொடங்கும் என சீனாவின் சிவில் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.