வெனிசூலாவில் மின் இணைப்பு துண்டிப்பால் சிகிச்சை பெற முடியாமல் 15 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெனிசூலா முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நாடே இருளில் மூழ்கியியிருந்த நிலையில் வைத்தியசாலையில் மின்சாரம் இல்லாததால் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெறமுடியாமல் 2 நாட்களில் 15 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்று வருவதாகவும், தொடர்ந்தும் மின் அணைப்பு துண்டிக்கப்படுமானால் அவர்களும் உயிர் இழப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதார உரிமைகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை இதன் பின்னணியில் அமெரிக்காவின் சதி இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது