Home இலங்கைவசந்த கரன்னாகொட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

வசந்த கரன்னாகொட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

by admin

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரனாகொட இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

கொழும்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைதுசெய்வதற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் கைதுசெய்வதற்கு தடைவிதித்து உத்தரவிட்டிருந்த உயர் நீதிமன்றம் இன்று 11 ஆம் திகதி காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More