தொழில் முயற்சியாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி சமுகத்தை வலுப்படுத்துதல் மற்றும் வறுமைக்கு உட்பட்டவர்களை பாதுகாக்கும் வகையில் இம்முறை வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன நுண்நிதிக் கடனை தள்ளுபடி செய்ய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான உரையின் போதோ அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வறட்சி நிலவிய மாவட்டங்களில் இந்த கடனைப் பெற்ற 45, 139 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்த நிதியை அரசாங்கமே செலுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நுண்நிதி பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர் அரசாங்க சதி இடம்பெற்ற காலப்பகுதியில் வட்டிவீதம் அதிகரித்தமையினால் நாட்டுக்கு வந்த முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் தொழிற்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர் கிராமத்திலுள்ள குளங்கள் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன எனவும் வாராந்த சந்தைகள் அமைக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.