காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு கோரி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாகவிருந்த பிரதான காவல்துறைப் பரிசோதகர் நெவில் சில்வா மேன்முறையீடு செய்துள்ளார்.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் மேன் முறையீட்டு சபையில் அவர் இந்த மேன் முறையீட்டை முன்வைத்துள்ளதாக தேசிய காவல்துறை ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சட்டவிரோத செயல் ஒன்றினை முன்னெடுப்பதற்காக இரு காவல்துறை உயர் அதிகாரிகள் சட்டவிரோதமாக பிறப்பித்த உத்தரவுகளை செயற்படுத்தாமையினாலேயே தனக்கு மேற்படி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தனது மேன்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment