7 நாட்களுக்குள் துப்பாக்கி வைத்திருப்போர் காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது இதனை அம்மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏர்ரல் 18ம்திகதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமைதாரர்கள் தங்கள் வசமுள்ள ரிவோல்வர், பிஸ்டல், ரைபிள், தோட்டா ரக துப்பாக்கிகள் முதலான அனைத்து ரக துப்பாக்கிகளையும் அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் இருந்து ஒரு வாரத்திற்குப் பின்னர் ஒப்படைத்த படைக்கலன்களை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் 7 நாட்களுக்குள் ஒப்படைக்க தவறும் உரிமதாரர்கள் மீது படைக்கல சட்டம் மற்றும் விதிகளின்படி கடும் நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது