Home இலங்கைவரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

by admin

2019 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் அதன் மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி , ஐக்கிய தேசிய முன்னணி , உள்ளிட்ட சில கட்சிகள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கூட்டு எதிர்க்கட்சி இம்முறையும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியும் இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More