146
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துக்கு எதிராகவே இவ்வாறு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்து அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love