குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் அழிவடைந்தன. இந்தப் பாதிப்புக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் 3250 நெற் பயிர்செய்கையாளர்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இவர்களுக்கான நட்டஈடுகள் அழிவுக்கேற்ற வகையில் வழங்கவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வழங்கப்பட்டும் வருகிறது. ஆனால் 3250 நெற் செய்கையாளர்களில் பலர் பிறிதொருவரின் வயல் காணியை குத்தைக்கு எடுத்தே வயல் விதைப்பை மேற்கொண்டனர். வெள்ள அழிவும் குத்தைக்கு எடுத்து விதைத்தவருக்கே ஏற்பட்டது .
ஆனால் வெள்ள அழவுக்கான நட்டஈடு சட்டரீதியாக காணி உரிமையாளரின் பெயரிலேயே பதியப்பட்டு அவருக்கே வழங்கப்பட்டும். இந்த நட்டஈட்டை பெறும் உரிமையாளர்கள் அதனை தங்களிடம் எவர் குத்தைக்கு எடுத்து விதைத்தாரோ அவர்களிடம் வழங்கவேண்டும். இதுவே மனிதாபிமானம்.
ஆனால் கிளிநொச்சி பல காணி உரிமையாளர்கள் வயல் அழிவுக்கான நட்டஈட்டை தாங்கள் பெற்றுவிட்டு அதனை குத்தைக்கு எடுத்து விதைத்த ஆதாவது உண்மையில் வயல் அழிவு ஏற்பபட்டவருக்கு ஆதாவது குத்தைக்காரருக்கு வழங்கவில்லை. இதனால் வயல் நிலங்களை குத்தைக்கு எடுத்து விதைத்து நட்டமடைந்த பல நெற்செய்கையாளர்கள் செய்வதறியாது காணப்படுகின்றனர்.
சட்ட ரீதியாக எதுவும் செய்ய முடியாது நட்டமடைந்த காணிகளை குத்தைக்கு எடுத்து நெற்செய்கை மேற்கொண்டவர்கள் செய்வதறியாது உள்ளனர்.