வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடு முழுவதிலும் அதிபர், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். அதற்கு ஆதரவாக யாழில் உள்ள பாடசாலைகளிலும் அதிபர் , ஆசிரியர்கள் கறுப்புபட்டி அணிந்து , பாடசாலை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..
அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்கு முன்பாக காலை 8 மணிமுதல் 8.30 மணிவரை கைகளில் கறுப்புப் பட்டி அணிந்து பாடசாலை நுழைவாயில் அமைதியாக ஒன்றுகூடி தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறைந்த வேதனங்களோடு பணியாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் தமது வேதனங்கள் அதிகரிக்கப்படவேண்டும் எனவும், அவசியமற்ற சுமைகள் நீக்கப்படவேண்டும் எனவும், மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை என தெரிவித்து, ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பளத்தை உயர்த்துதல். ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் தேவையற்ற நெருக்கீடுகளை அகற்றுதல். மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 வீதம் ஒதுக்குதல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.