குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகம் , ஆலய பங்குத்தந்தை , நெடுந்தீவு பிரதேச செயலகம் , உள்ளிட்டவையுடன் இலங்கை கடற்படையினரும் இணைந்து ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இம்முறை திருவிழாவுக்கு யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் , இந்தியாவில் இருந்தும் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது.
ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பும் இலங்கை பக்தர்களுக்கான படகு சேவைகள் நாளை 15ஆம் திகதி அதிகாலை 4.30 மணி தொடக்கம் பகல் 10.30 மணி வரையில் நடைபெறும் குறிகட்டுவானில் இருந்து கச்சதீவுக்கான ஒரு வழி பயண கட்டணமாக 325 ரூபாய் என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
பக்தர்களுக்கான உணவு வசதிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் , அதேவேளை பலநோக்கு கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் கடைகளும் இயங்க உள்ளன.