மும்பை சத்ரபதி சிவாஜி புகையிரத நிலையம் அருகேயுள்ள நடைபாதை மேம்பாலம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
வீதியின் மேலே அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம், நேற்று இரவு 7.30 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்ததனால் அதில் பயணித்தவர்கள் கீழேயிருந்த வீதியில் விழுந்ததாகவும் பாலத்தில் இருந்த இரும்பு கம்பிகள், தளம் என்பனவும் கீழே விழுந்ததனால் அந்த பகுதியே புகைமூட்டமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புபடையினர் மீட்பு பணியினை மேற்கொண்டதுடன் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிப்பட்டுள்ளது.
இந்த நடைபாதை மேம்பாலம் பராமரிப்புப் பணிகள் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டு, பாதசாரிகளை அனுமதித்தவாறே பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Add Comment